திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2023 (18:21 IST)

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை?

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு  உடன்பாடு எட்டியுள்ள நிலையில் வாரத்திற்கு   நாட்கள் மட்டுமே வேலை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்தியாவில்  உள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் பொதுத்துறை  வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியானது.

அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 % ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில்  நாட்கள் மட்டுமே வேலை  என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து  பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம்  நாட்கள் மட்டுமே அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் வங்கிகளின் மாத விடுமுறை  நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரிக்கும் என தெரிகிறது.