1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IND vs SA- 2nd T20I: India's openers duck out

IND vs SA- 2 வது டி20 போட்டி: ஜெய்ஸ்வால் மற்றும் கில் டக் அவுட்!

india- south africa
இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வரும் நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட்டாகி அதிர்சியளித்தனர்.

அதன்பின்னர், களமிறங்கிய  வர்மா 29 ரன்னும், யாதவ் 35 ரன்னும் அடித்தனர். தற்போது இந்திய அணி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜேசன், வில்லியம்ஸ், கூட்ஸே தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இந்த தவறை செய்தால் மட்டும் தோனி கடுப்பாகிவிடுவார்… சி எஸ் கே முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!