வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

டி 20 வரலாற்றில் உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா… சிக்சர் மழையில் நனைந்த ரசிகர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டி 20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 258 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சார்லஸ் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்து வானவேடிக்கைக் காட்டினார்.

இதையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, ஆரம்பம் முதலே அதிரடியில் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர், குயிண்டன் டி காக் 44 பந்துகளில் சதமடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம் ஆகியோரும் இதே அதிரடியைத் தொடர தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் 259 ரன்கள் சேர்த்து இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையை தற்போது தென் ஆப்பிரிக்கா படைத்து சாதனைப் படைத்துள்ளது.