ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (18:01 IST)

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

australia
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காஅணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் திடீரென டெஸ்ட் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்ஆப்பிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்று உள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். டேவிட் வார்னர் 10 ரன்னில் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது
 
இதனை அடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர் நாளை இந்த போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran