திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 13 மார்ச் 2023 (15:27 IST)

கடைசி பந்தில் நியுசிலாந்து திரில் வெற்றி… டி 20 போட்டியை மிஞ்சிய டெஸ்ட்

நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடைசி கட்டத்தில் பரபரப்பின் உச்சத்தைத் தொட்டு நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 355 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரர் மேத்யூஸ் சதமடித்தார்.

அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி 373 ரன்கள் சேர்த்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 302 ரன்கள் சேர்த்தது. இதனால் ஐந்தாம் நாளில் 285 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய நியுசிலாந்து அணி, வேகமாக ரன்களை சேர்த்து வெற்றிக்கு அருகில் சென்றது.

ஆனால் கடைசியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. மறுமுனையில் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி சதமடித்து நின்றார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் பரபரப்பாக சென்ற அந்த ஓவரில் கடைசி பந்தில் ஒரு ரன் சேர்த்து இலக்கை வெற்றிப் பெறவைத்தார். இதன் மூலம் கடைசி பந்தில் நியுசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.