ஐபில் தொடரில் தென் ஆப்பிரிக்கா இணைவதில் தாமதம்… பின்னணி என்ன?
மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டித் தொடரில் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவில் நடக்க உள்ளது. இந்நிலையில் இதற்கான பயிற்சிகளை எல்லா அணிகளும் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு வீரர்களும் விரைவில் அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஏப்ரல் 2 ஆம் தேதிதான் இணைவார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை முடித்துவிட்டுதான் ஐபிஎல் போட்டியில் விளையாட வருவார்கள் என அறிவித்துள்ளது.