வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 7 ஜனவரி 2023 (08:57 IST)

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் டி 20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், ஒன்றில் இலங்கை அணியும் வெற்றி பெற்று தொடர் இப்போது சமனில் உள்ளது.

இதையடுத்து இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது போட்டி  ராஜ்கோட் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

இந்திய அணியில் பவுலிங் பிரிவு எதிர்பார்த்த அளவுக்கு சரியாக செயல்படாததால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.