1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (19:55 IST)

இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இலங்கை: ஆஸ்திரேலியா பரிதாபம்

slvs aus
இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இலங்கை: ஆஸ்திரேலியா பரிதாபம்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 8ஆம் தேதி தொடங்கியது
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன்கள் எடுத்தது.
 
இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த ஆட்டத்தின் நாயகன் ஆக பிரபாத் ஜெயசூரியா தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பதும் தொடர் நாயகனாக சண்டிமால் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் இந்த தொடரை வென்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது