1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 25 ஜனவரி 2025 (08:38 IST)

இந்திய அணியின் வெற்றி தொடருமா?... இன்று சென்னையில் இரண்டாவது டி 20 போட்டி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி கடந்த 22 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன்படி பேட்டிங் ஆடவந்த இங்கிலாந்து அணி அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கோடு பேட் செய்ய வந்த இந்திய அணி 13 ஆவது 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டி இமாலய வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றியோடு தொடங்கியுள்ளது.

இதையடுத்து இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் அதிரடி சரவெடி சென்னையிலும் தொடர்ந்து வெற்றியைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.