திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2025 (11:19 IST)

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தரமானது: பூடான் அரசு பாராட்டு..!

Voting Machine
இந்தியாவில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மிகவும் தரமானவை என்றும் இந்தியா எங்களுக்கு கொடுத்த அந்த மின்னணு வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடந்த நிலையில் மக்களின் நம்பிக்கையே அந்த இயந்திரங்கள் பெற்றுள்ளதாகவும் பூடான் தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த சர்வதேச தேர்தல் கமிஷன் மாநாட்டில் பூடான் நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனர்   பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது ’இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தரம் உள்ளதாக இருக்கிறது என்றும் இந்தியா வழங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம்தான் பூடான் தேர்தலில் தேர்தலில் பயன்படுத்தப்பட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக நான் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இந்த இயந்திரங்கள் செயல்திறன் பாராட்டும் வகையில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றன. ஆனால் பூடான் தேர்தல் கமிஷனர் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran