தொடர்புடைய செய்திகள்
- கோலியைப் பார்த்து எதிரணி வீரர்கள் அஞ்சுவார்கள்… நடுவர் அனில் சௌத்ரி பகிர்ந்த தகவல்!
- எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இளம் இந்திய அணி படைத்த சாதனைகளின் லிஸ்ட்!
- என் சகோதரிக்கு புற்றுநோய்.. ஒவ்வொரு பந்தையும் அவரை நினைத்து தான் போட்டேன்: ஆகாஷ் தீப்
- ஆகாஷ் தீப் செய்த அற்புத சாதனை.. 49 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!
- முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி.. 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..
என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் அளப்பரிய பங்களிப்பு முக்கியக் காரணிகளாக அமைந்தது.
இந்த போட்டி ஷுப்மன் கில்லுக்குக் கேப்டனாக முதல் வெற்றி. இந்த போட்டியில் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தார். முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் சேர்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்துப் பேசியுள்ள ஷுப்மன் கில் “எட்ஜ்பாஸ்டனில் பெற்ற வெற்றி என் வாழ்நாள் முழுவதும் நான் நினைத்துப் பார்க்கும் ஒரு சந்தோஷமான வெற்றியாக இருக்கும். நான் ஓய்வு பெறும் போது என் கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு சந்தோஷமான தருணமாக இதை நினைப்பேன்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்