திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (17:04 IST)

மின்னல் வேகத்தில் கோல் அடித்த மெஸ்ஸி…வைரல் வீடியோ

அர்ஜென்ட் – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற்றபோது, மெஸ்ஸி மின்னல் வேகத்தில் கோல் அடித்து அசத்தினார்.

சர்வதேச கால்பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர்,  சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தேசிய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இந்த நிலையில், உலக சாம்பியன் அர்ஜென்டினா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி, சீனா தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டியா அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இப்போட்டியில். அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி ஆட்டம் தொடங்கிய 79 வது வினாடிக்குள் அற்புதமாக கோல் அடித்தார். இது அவரது கேரியரில் அடிக்கப்பட்ட வேகமான கோல் ஆகும்.

இதற்கு முன்னதக 129 வினாடிக்குள் வலைக்குள் அனுப்பியதே அவரது அதிவேக கோல் ஆகும். இது சர்வதே போட்டியில் மெஸ்ஸியின் 103 வது கோல் ஆகும்.