கோஹ்லியை விட அதிகம் சம்பாதிக்கும் ப்ரியங்கா சோப்ரா – எதில் தெரியுமா?

kohli
Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (13:39 IST)
இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் போஸ்ட் போடுவதன் மூலம் அதிகம் பணம் சம்பாதிப்பவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

2019ம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராம் மூலம் உலகளவில் பணம் ஈட்டுபவர்கள் பற்றிய அந்த பட்டியலில் இரண்டே இந்தியர்கள்தான் இருந்தனர். ஒருவர் விராட் கோஹ்லி, மற்றொருவர் ப்ரியங்கா சோப்ரா. பல திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், மாடல்கள் உள்ள அந்த பட்டியலில் ப்ரியங்கா சோப்ரா 19வது இடத்திலும், விராட் கோஹ்லி 23 வது இடத்திலும் உள்ளனர்.

இன்ஸ்டாக்ராமில் விராட் கோஹ்லியை 38 மில்லியன் ரசிகர்களும், ப்ரியங்கா சோப்ராவை 43 மில்லியன் ரசிகர்களும் பின் தொடர்கிறார்கள். ப்ரியங்கா சோப்ரா ஒரு இன்ஸ்டாக்ராம் போஸ்ட்டுக்கு 2 லட்சத்து 71 ஆயிரம் டாலர்களும், விராட் கோஹ்லி 1 லட்சத்து 96 ஆயிரம் டாலர்களும் வருமானமாக பெறுகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :