முகமது சமியால் விளையாட முடியாதா? – விசாவை ரத்து செய்த அமெரிக்கா?

Mohamed Shami
Last Modified சனி, 27 ஜூலை 2019 (14:06 IST)
இந்திய கிரிக்கெட் வீரார் முகமது சமி வெஸ்ட் இண்டீஸுடன் விளையாட அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் அவரது விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பந்து வீச்சாளர் முகமது சமி. நடந்து முடிந்த உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல விக்கெட்டுக்லை வீழ்த்தியவர். தற்போது வெஸ்ட் இண்டீஸுடன் சுற்று பயண ஆட்டத்தில் விளையாடும் அணியில் தேர்வாகியுள்ளார் முகமது சமி.

இந்த ஆட்டம் அடுத்த மாதம் ஆகஸ்ட் மூன்று முதல் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மற்ற வீரர்களின் விசாக்களை ஏற்றுக்கொண்ட அமெரிக்க தூதரகம் முகமது சமியின் விசாவை நிராகரித்துள்ளது.

தன்னை கொடுமைப்படுத்துவதாக முகமது சமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் அளித்த புகாரின் கொல்கத்தா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அமெரிக்க தூதரகத்திற்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

தேவையான ஆவணங்களை சமர்த்திருப்பதாகவும், சமி நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :