1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shoaib akthar again talked about virat kohli retirement

விராட் கோலி டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும்… சோயிப் அக்தர் கருத்து!

கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டுமென சோயிப் அக்தர் பேசியுள்ளார்.

கோலி பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி சமிபத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

பலரும் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று அதை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் “கோலி டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும். அவர் இந்த போட்டிக்காக பயன்படுத்திய ஆற்றலில் மூன்று ஒரு நாள் போட்டி சதங்களை அடித்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார். முன்பே இவர் இந்த கருத்தை ஒருமுறைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: இன்று இரண்டு பரபரப்பான போட்டிகள்!