1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli innings reminding 17 years back dhoni innings

2005 ல் தோனி… 2022 ல் கோலி…. ரசிகர்களுக்கு தீபாவளியை மறக்க முடியாததாக்கிய இரண்டு இன்னிங்ஸ்கள்!

தோனி
நேற்றைய இந்திய அணியின் வெற்றி இன்று இந்திய மக்களுக்கு தீபாவளிப் பரிசாக அமைந்துள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.  31 ரன்களுக்கு 4 ரன்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கட்டிக்காத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினார் கோலி.

அவர் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்த இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளு 4 சிக்ஸர்களும் அடக்கம். அவரின் வாழ்நாள் சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ள கோலியை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள்  வீரர்கள் என அனைவரும் அவரைப் பாராட்டி தீபாவளிக்கு முந்தைய நாளே இந்தியாவில் தீபாவளி தொடங்கி பலரும் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

நேற்றைய கோலியின் இன்னிங்ஸை நினைவுபடுத்தும் விதமாக இதே போல தீபாவளிக்கு முந்தைய நாள் தோனி இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்த போட்டியையும் பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த இன்னிங்ஸில் இக்கட்டான நிலையில் இருந்த இந்தியாவை தோனி தனி ஆளாக வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: வங்கதேசம் - நெதர்லாந்து மோதல்!