வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (17:20 IST)

பந்தில் எச்சில் தடவி சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வீரர் நவாஸ் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.  31 ரன்களுக்கு 4 ரன்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கட்டிக்காத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினார் கோலி.

இந்நிலையில் அந்த போட்டியில் 20 ஆவது ஓவரில் இந்திய அணி விளையாடிய போது நான்காவது பந்தில் கோலி சிக்ஸ் அடித்தார். அந்த பந்து இடுப்புக்கு மேலே வீசப்பட்ட்டதால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது சம்மந்தமாக பாகிஸ்தான் வீரர்கள் நடுவர்களிடம் விவாசித்தது பரபரப்பானது.

இதையடுத்து இப்போது புதிதாக மேலும் ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது. 20 ஆவது ஓவரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நவாஸ் பந்தில் எச்சில் தடவியது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மேல் ஐசிசி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.