புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (09:31 IST)

ஷிகார் தவானைப் புரட்டி எடுக்கும் அவரது தந்தை… ஏன்? வைரலாகும் வீடியோ!

பஞ்சாப் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடினார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். இத்தனைக்கும் அவர் மோசமான பார்மில் இல்லை.ஆனால் அவரை விட பல இளைஞர்கள் சிறப்பாக விளையாடி அந்த இடத்துக்காக காத்திருக்கின்றனர். அதில் முக்கியமாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும். தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கூட கணிசமாக ரன்களை சேர்த்து வருகிறார் தவான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. இந்நிலையில் தவான் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தவானின் அப்பா அவரை அடிக்கவும், தவான் விழுந்து புரள்கிறார். இது சம்மந்தமாக தவான் “ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் திரும்பியதால் என் தந்தையுன் நாக் அவுட்” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.