திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் செய்த மகத்தான சாதனை!

Shikar dhawan
நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் மகத்தான சாதனை செய்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் 88 ரன்கள் அடித்தார் என்பதும் இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார் 
 
ஏற்கனவே 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமை விராத் கோலிக்கு இருக்கும் நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது ஷிகர் தவான் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது