தொடர்புடைய செய்திகள்
- 6 வருடத்துக்குப் பிறகு …. வித்தியாசமான மாஸ்க்… தோனி விக்கெட்… ஸ்டார் ஃபர்பாமென்ஸ் ரிஷி தவான்!
- நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் செய்த மகத்தான சாதனை!
- ”அவருக்கு இதைதான் செய்யவேண்டும்” – 3 போட்டிகளிலும் சொதப்பிய ருத்துராஜ் குறித்து ஜடேஜா கருத்து!
- ரிஷப் பண்ட்தான் எதிர்கால தொடக்க வீரரா? ரோஹித் ஷர்மா பதில்!
- இந்திய ஒருநாள் அணியில் இஷான் கிஷான் சேர்ப்பு!
பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகும் இந்திய கிரிக்கெட் வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். இத்தனைக்கும் அவர் மோசமான பார்மில் இல்லை.ஆனால் அவரை விட பல இளைஞர்கள் சிறப்பாக விளையாடி அந்த இடத்துக்காக காத்திருக்கின்றனர். அதில் முக்கியமாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும். தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கூட கணிசமாக ரன்களை சேர்த்து வருகிறார் தவான்.
இந்நிலையில் தவான் பாலிவுட் படமொன்றில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படம் பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான ஒன்றாக அமைந்துள்ளது. ஏற்கனவே இர்ஃபான் பதான் தமிழில் கோப்ரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்