1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sheldon Jackson tweet going to viral

யாரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்..? நானா..? – பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த வீரர்!

Cricket
இந்திய கிரிக்கெட் வீரரை வெளிநாட்டவர் என கூறிய பத்திரிக்கையாளருக்கு கிரிக்கெட் வீரர் பதிலடி தரும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அனைத்து ஊடகங்களிலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பேசு பொருளாகியுள்ளன. இந்த ஆண்டு 10 அணிகள் இடம் பெறுவதால் கிரிக்கெட் ரசிகர்களும் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சனை தொடர்ந்து மூன்று முறை வெளிநாட்டு வீரர் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் உரிய விளக்கத்தையும் அளித்தது.

ஆனாலும் இதுகுறித்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் ஷெல்டன் ஜாக்சன் சௌராஷ்டிராவின் வரைபடத்தை பகிர்ந்துள்ளார். அவர் பிறந்த ஊரான சௌராஷ்டிரா இந்தியாவிற்குள்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்டு வகையில் அவர் அவ்வாறு செய்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அப்ப இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா? தோனியின் முடிவால் ரசிகர்கள் சோகம்!