செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (14:49 IST)

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்: புதிய கேப்டன் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் ஜடேஜா நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை அணி என்றால் தோனி, தோனி என்றால் சென்னை அணி என்று இருந்த நிலையில் திடீரென கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆனால் அதேநேரத்தில் கேப்டன் பதவி ஏற்கும் ஜடேஜாவுக்கு தோனி இந்த ஆண்டு வழிகாட்டியாக இருப்பார் என்றும் கேப்டன் பதவிக்கு உரிய ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டு அடுத்த ஆண்டு தோனி ஓய்வு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.