1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shame on BCCI cricket fans anger

#ShameonBCCI - அதிருப்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

#ShameonBCCI
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

 
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் விராட் கோலியும் ஒருவர். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி 20 போட்டிகளின் கேப்டன்சியில் இருந்து விலகினார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கேப்டனாக நீடித்தார்.
 
ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக அவரிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன்சியும் பிடிங்கப்பட்டு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலில், கோலி தானாகவே கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக 48 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர் செய்யாததால் நீக்கப்பட்டார் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இந்திய வீரரை இப்படியா அவமதிப்பது என்ற ஆதங்கத்தோடு #ShameonBCCI  என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.