வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (08:03 IST)

5 உலகக் கோப்பையில் விளையாடி சாதனை படைக்கும் பங்களாதேஷ் வீரர்கள்!

நாளை முதல் 15 ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் 10 நகரங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. நாளை நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதன் மூலம் பங்களாதேஷ் வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஷ்பிகூர் ரஹீம் ஆகிய இருவரும் தொடர்ந்து 5 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடியவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அறிமுகமான நிலையில், அதன் பிறகு நடந்த 2011, 2015, 2019 மற்றும் 2023 ஆகிய தொடர்களிலும் தொடர்ந்து விளையாடியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் சச்சின், பாகிஸ்தான் ஜாவேத் மியாண்டட் ஆகியோரின் (5 உலகக் கோப்பைகள்) சாதனையை சமன் செய்துள்ளனர்.