1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:22 IST)

தமிழர் நலனை விட உங்கள் பான் இந்தியா படம்தான் முக்கியமானதா?புளு சட்டைமாறன்

cheran -kicha sudeep
காவிரி விவகாரத்தில்  கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுப்பதுடன்,  தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில்   கன்னட சூப்பர் ஸ்டார்கள் சிவராஜ்குமார் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் காவிரி கர்நாடகாவில் சொத்து என்று கூறிவருகின்றனர்.

கன்னட  சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப் நடிப்பில்,  தமிழ் இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவாகவுள்ள  ‘கிச்சா47’ பட அதிகாரப்பூர்வ அறிவிப்பை  புதிய போஸ்டருடன்  சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டிருந்த நிலையில், காவிரி விவகாரத்தை விட பான் இந்தியா படம்தான் சேரனுக்கு முக்கியமா என்று புளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து புளூ சட்டை மாறன் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’’காவிரி எங்கள் சொத்து. விட்டுத்தர மாட்டோம் - கிச்சா. இவரை வைத்து பான் இந்தியா படம் இயக்கப்போகும் தமிழ் மண்ணின் மைந்தர் சேரன் அவர்களே.. 'காவிரி ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட சொத்தல்ல. தேசத்தின் சொத்து. அதில் தமிழகத்திற்கும் பங்குண்டு' எனச்சொல்ல தைரியம் இல்லையா? தமிழர் நலனை விட உங்கள் பான் இந்தியா படம்தான் முக்கியமானதா?’என்று தெரிவித்துள்ளார்.