ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (08:00 IST)

உலகக் கோப்பை தொடரில் சச்சினுக்கு அளிக்கப்பட்ட கௌரவம்!

நாளை முதல் 15 ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் 10 நகரங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில் இன்றிரவு பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கௌரவம் அளிக்கும் விதமாக அவரை இந்த தொடரின் தூதுவராக ஐசிசி அறிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 5 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி, உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக உள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த அவர் அந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.