1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:26 IST)

ஆஷஸ் போல ‘காந்தி-ஜின்னா’ தொடர் நடத்தவேண்டும்… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை!

கிரிக்கெட் தொடர்களின் பிரபலமான் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஆஷஸ் தொடர். உலகளவில் அனைத்து நாட்டு கிரிக்கெட் நாட்டு ரசிகர்களாலும் ஆர்வமாகப் பார்க்கப்படும் தொடராக அமைந்துள்ளது.

அது போல இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் பைலேட்டரல் தொடர் ஒன்றை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ- இடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தொடருக்கு காந்தி-ஜின்னா தொடர் என பெயர் வைக்கலாம் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருநாட்டுத் தொடர் நடப்பதில்லை. 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உலகக் கோப்பை விளையாட பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது.