செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (11:23 IST)

இந்த வருடத்தின் மிகப்பெரிய ஸ்கேம் மேக்ஸ்வெல்தான்… கொந்தளிக்கும் ஆர் சி பி ரசிகர்கள்!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர் சி பி அணி மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆர் சி பி அணியில் பாஃப் டு பிளசீஸ், ரஜத்படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் அந்த அணி 196 ரன்கள் சேர்த்தது.

 இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆர் சி பி பவுலர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் அடி வெளுத்து வாங்கியது. அந்த அணியின் இஷான் கிஷான் 34 பந்துகளில் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்து ஆட்டத்தை மிகவும் எளிதாக்கினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இந்த சீசனில் அவரின் மூன்றாவது டக் அவுட் ஆகும். இதுவரை 6 போட்டிகள் விளையாடி 32 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினால் பொளந்துகட்டும் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். 14 கோடி ரூபாய் சம்பளத்துக்கு விளையாடும் மேக்ஸ்வெல் தொடர்ந்து சொதப்பி வருவதால் ஆர் சி பி ரசிகர்கள் அவரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.