தொடர்புடைய செய்திகள்
- கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!
- வீரர்கள் இப்படிதான் தேர்வு செய்யப்பட வேண்டும்… யோ யோ டெஸ்ட் வைத்தல்ல – கம்பீர் கருத்து!
- உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பாகிஸ்தான்!
- மீண்டும் வெற்றிப்பாதையில் கோலிவுட் திரையுலகம்.. மூன்று படங்கள் தொடர் வெற்றி..!
- 3 போட்டிகளிலும் தோல்வி… உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் இலங்கை அணி!
கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!
இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேர்த்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இது அவர் மேல் கடுமையான விமர்சனங்களை எழவைத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர், “நியுயார்க் மைதானத்தில் கோலி மட்டுமில்லை, வேறு யாருமே பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கும் போது இன்னும் அழுத்தம் அதிகமாகும். அப்போது கோலியிடம் இருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வரும் என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் தன்னுடைய உச்சகட்ட ஃபார்மில் இருந்தார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் அவர் 700 க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.