வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (09:06 IST)

3 போட்டிகளிலும் தோல்வி… உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் இலங்கை அணி!

நடந்து வரும் உலகக் கோப்பை தொடர் பவுலர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலவும், பேட்ஸ்மேன்களுக்கு போர்க்களத்தில் நிற்பது போலவும் அமைந்துள்ளது. ஐபிஎல் பொன்ற பேட்டிங்குக்கு சாதகமான தொடரில் விளையாடிவிட்டு வந்த வீரர்களுக்கு பல அதிர்ச்சிகளைக் கொடுத்து வருகிறது. இந்த போட்டிகளில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டும் 200 ரன்களுக்கு மேல் ஒரு அணி சேர்த்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் எல்லாம் சொதப்பி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளன. அதில் நியுசிலாந்தை அடுத்து தற்போது இலங்கை அணியும் வெளியேறுகிறது.

டி பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளையும் தோற்றுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இலங்கை அணி சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் மோசமான ஃபார்மில் உள்ளது. அந்த மோசமான ஆட்டம் இந்த சீரிஸிலும் தொடர்கிறது.