1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. sachin statement about afganistan victory

இனிமேலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியைப் பார்த்து ஆச்சர்யப்பட முடியாது.. சச்சின் பாராட்டு!

cricket
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. இதன் விளைவாக, பாகிஸ்தானைப் போலவே அந்த அணியும் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹீம் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இதனை அடுத்து, 326 என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வெற்றி குறித்து பேசியுள்ள சச்சின் “இனிமேலும் நாம் ஆப்கானிஸ்தான் பெறும் வெற்றிகளைப் பார்த்து ஆச்சர்யப் பட முடியாது. ஏனென்றால் அவர்கள் வெற்றி பெறுவதை பொழுதுபோக்காக ஆக்கிக் கொண்டுள்ளனர். நன்றாக விளையாடினார்கள்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி.. ஜாஸ் பட்லர் கேப்டன் பதவியை துறக்கிறாரா?