சி எஸ் கே கேப்டனாக முதல் அரைசதம்… ருத்துராஜ் பகிர்ந்த நாஸ்டால்ஜியா தருணம்!
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சி எஸ் கே அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த எளிய இலக்கை துரத்திய சி எஸ் கே அணி18 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்த சீசனில் முதல் தோல்வியை தழுவியுள்ளது கொல்கத்தா. இந்த போட்டியில் சென்னை அணிக் கேப்டன் ருத்துராஜ் அரைசதம் அடித்தார். இதுதான் சி எஸ் கே அணியின் கேப்டனாக அவர் அடிக்கும் முதல் அரைசதம்.
இதுபற்றி பேசியுள்ள அவர் ”இந்த போட்டி எனக்கு நான் முதல் முதலாக சி எஸ் கே அணிக்காக அரைசதம் அடித்த போட்டியை நினைவுபடுத்தியது. அந்த போட்டியின் போது என்னோடு தோனி இருந்தார். இருவரும் இணைந்துதான் போட்டியை நிறைவு செய்தோம். ” எனக் கூறியுள்ளார்.