வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:44 IST)

அடடா இந்த ஒரு காட்சி போதுமே… கட்டித் தழுவிய தோனியும் கம்பீரும்!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சி எஸ் கே அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சிஎஸ்கே பவுலர்களின் தாக்குதலை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.

இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்திருந்தார். இந்த எளிய இலக்கை துரத்திய சி எஸ் கே அணி18 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்த சீசனில் முதல் தோல்வியை தழுவியுள்ளது கொல்கத்தா.

இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டனர். அப்போது சி எஸ் கே அணியின் மூத்த வீரரும், கொல்கத்தா அணியின் ஆலோசகர் கம்பீரும் சந்தித்துக்கொண்ட போது கைகுலுக்கிக் கொண்டு கட்டியணைத்து தழுவினர். கம்பீர் நீண்ட காலமாகவே தோனி மற்றும் கோலி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் இந்த போட்டிக்கு முன்பாக தோனியை சிலாகித்து பேசியிருந்தார். இந்நிலையில் அவர்களின் இந்த சைகையானது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.