புதன், 5 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (09:52 IST)

சி எஸ் கே வுக்காக தோனி படைத்த சாதனையை சமன் செய்த ஜடேஜா!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சி எஸ் கே அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த எளிய இலக்கை துரத்திய சி எஸ் கே அணி18 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்த சீசனில் முதல் தோல்வியை தழுவியுள்ளது கொல்கத்தா. இந்த போட்டியில் மூன்று விக்கெட்கள் மற்றும் மூன்று கேட்ச்களை பிடித்த ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இது ஜடேஜாவுக்கு 15 ஆவது ஆட்டநாயகன் விருதாகும். இதன் மூலம் சி எஸ் கே அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர் என்ற தோனியின் சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார்.