செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:51 IST)

IND vs AUS- T20: ருதுராஜ்.அதிரடி சதம்...ஆஸ்., அணிக்கு இலக்கு இதுதுதான்!

Ruturaj Gaikwad
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி இன்று நடந்து வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  மேத்யூ தலைமையிலான ஆஸ்., முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
 
எனவே சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஜெய்ஸ்வால்  6 ரன்னுடன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கிஷான் டக் அவுட்டானார்.  ஆனால், ருதுராஜ் 57 பந்துகளில் 123 ரன்கள் அடித்து அசத்தினார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்னும், வர்மா 31 ரன்னும் அடித்தனர்.
 
எனவே 20 ஓவர்களில் இந்திய அணி 222 ரன்கள் அடித்து ஆஸ்., அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
ஆஸ்., தரப்பில் ரிச்சர்ட்சன்,ஜேசன், ஆரோன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.