புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (19:26 IST)

சூப்பர் ஸ்டார் - ஜோதிகா நடித்த படத்தை பாராட்டிய சூர்யா

mammooty jyothika
இந்திய சினிமாவில் மலையாள சினிமாவில் இருந்து பல அற்புதமான படங்கள் வருகின்றன.
 
இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி வெளியான படம் காதல் தி கோர். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜியோ பேபி இப்படத்தை இயக்கியிருந்தார். மேத்யூ புலிக்கன் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தில் மேத்யூ ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என ஓமணா விவாகரத்து கேட்டிருக்கிறார். இதில்,மேத்யூவுக்கு ஓமணாவிய பிரியவும் மனமின்றி இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கிளைமேக்ஸ்.
 
சினிமா துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பல தரப்பிலும்  இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
இந்த நிலையில், நடிகர் சூர்யா, இப்படத்தை பாராட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
 
அழகான எண்ணங்கள் ஒன்றிணையும்போது, 'காதல் தி கோர்' போன்ற திரைப் படங்கள் கிடைக்கும். இது முற்போற்கான திரைப்படம். சினிமா மீது காதல் கொண்டுள்ள நடிகர் மம்முட்டி. அன்பு என்றால் என்ன எனக்காட்டி, அனைவரின் இதயங்களையும் வென்ற எனது 'ஓமணா' ஜோதிகா உள்ளிட்ட படகுழுவினருக்கு எனது பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார்.