1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. BCCI plans to shift kohli and rohith from A+

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

சாம்பியன்ஸ் கோப்பை
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தொடரோடு ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிசிசிஐ, ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரை சம்பளப் பட்டியலில் A+ பிரிவில் இருந்து A பிரிவுக்கு கீழிறக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூவரும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகப்போகிறது. அதனால் அவர்களை A பிரிவுக்கு மாற்றி சம்பளத்தைக் குறைக்க பிசிசிஐ நினைப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!