1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma smashed 250 sixes in one day internationals

நேற்றைய போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த ஹிட்மேன்… இந்திய வீரர்களில் முதல் ஆளாக படைத்த சாதனை!

ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 250 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இப்போது மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் முக்கிய சாதனை ஒன்றை படத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 250 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேனாக அவர் சாதனை படைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவர் 126 சிக்ஸர்களை விளாசியுள்ளார். நேற்றைய போட்டியில் மட்டும் அவர் 5 சிக்ஸர்களை விளாசினார்.
அடுத்த கட்டுரையில்
சிறுமியைத் தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸ்ர்… சந்தித்து வருத்தம் தெரிவித்த ஹிட்மேன்!