பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும்… வெற்றிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா பேச்சு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
182 என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.. இதனை அடுத்து இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்த போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மூன்று ஸ்பின்னர்களோடு களமிறங்கினோம். அது பிட்ச் மற்றும் எதிரணியை மனதில் வைத்தே எடுக்கப்பட்ட முடிவு. 181 ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன்களை பாராட்ட வேண்டும். ஏனென்றால் இந்த இலக்கை வைத்துக் கொண்டு எங்கள் பவுலிங் யூனிட்டால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.
பும்ராவால் என்ன செய்ய முடியும் என்பது உலகத்துக்கே தெரியும். அவரை நாம் ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும். அணியில் தானாகவே பொறுப்பெடுத்துக் கொண்டு செயல்படுபவர் அவர்.” எனக் கூறியுள்ளார்.