1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (08:36 IST)

24 பந்துகளில் 20 டாட் பந்துகள்… ஆப்கானிஸ்தான் சோலியை முடித்த பும்ரா!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 53 ரன்களும் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.. இதனை அடுத்து இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் சூப்பர் 8 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர் பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் வீசிய நான்கு ஓவர்களில் 20 பந்துகளை டாட் பந்துகளாக விசினார். வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தா அவர் கச்சிதமாக ஆப்கன் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். பவுலிங் தரப்பில் மற்ற பவுலர்கள் ரன்களைக் கொடுத்தாலும் பும்ரா இவ்வளவு கட்டுக்கோப்பாக பந்துவீசியது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.