எனக்கு உடல்நிலை சரியில்லைதான்.. ஆனா சும்மா இருக்க மாட்டேன்! – ரோகித் ஷர்மா நம்பிக்கை!

5000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா!
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (09:51 IST)
ஆஸ்திரேலிய சுற்று பயண போட்டிகளில் பங்கேற்காத நிலையில் தனக்கு உடல்நிலை பிரச்சினை உள்ளதாக ரோகித் ஷர்மா ஒப்புக்கொண்டுள்ளார்.

அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் விளையாடிய இந்திய அணி வீரர் ரோகித் ஷர்மா காயம்பட்டார். இதனால் ஆஸ்திரேலியா சுற்று பயண ஆட்டம் செல்லும் அணியில் அவர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐபிஎல் இறுதி போட்டிகளில் கலந்து கொண்ட ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடி தனது திறனை நிரூபித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு அவர் சுற்றுப்பயண ஆட்டம் செல்ல அவரது தகுதியை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதனால் ஆஸ்திரேலியா சென்ற அவர் மீண்டும் பெங்களூர் திரும்பி தனது தகுதியை நிரூபிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ”எனக்கு காயம் ஏற்பட்டுள்ளதும், உடல்நிலையில் பிரச்சினை உள்ளதும் உண்மைதான். தற்போது உடல்நிலை சரியாகி வரும் நிலையில் தொடர்ந்து பயிற்சியும் மேற்கொண்டு வருகிறேன். ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த 25 நாட்களில் எனது பயிற்சியை சிறப்பாக மேற்கொள்ள முடியும். பிறகு டெஸ்ட் மேட்ச்சில் கலந்து கொள்வேன்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :