வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:28 IST)

நேற்று அரைசதம் அடித்து சாதித்த ரோஹித் சர்மா! - எப்படி தெரியுமா..?

Rohit Sharma
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியுடம் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டமே தோல்வியை சந்தித்தது.

கடந்த 10 சீசன்களாக தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதே இல்லை என்ற ஒரு குறை நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஆர்சிபி – மும்பை இந்தியன்ஸ் போட்டி வெகுவாக உற்று நோக்கப்பட்டது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வழக்கம்போல தோல்வியை தழுவியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலேயே விக்கெட் இழந்தபோதே ரசிகர்களின் நம்பிக்கை பறிபோனது. தொடக்க பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா (1), இஷான் கிஷன் (10), கேமரூன் க்ரீன் (5), சூர்யகுமார் (15) ஆகியோர் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களுக்கு தொங்கிய ஆட்டத்தை திலக் வர்மா ஒற்றை ஆளாக நின்று சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி 84 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை 171 ஆக உயர்த்தினார். ஆனாலும் ஆர்சிபியின் விராட் கோலி, ஃபாப் டூ ப்ளெசிஸ் பார்ட்னர்ஷிப்பின் அசுர பாய்ச்சலில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தாலும் வேறு ஒரு வகையில் ஐபிஎல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோகித் சர்மா. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் தொடக்கத்திலேயே 0-5 ரன்களுக்கு அதிகமுறை ஆட்டம் இழந்த வீரர்களில் 50 முறை இவ்வாறாக ஆட்டமிழந்து முதல் இடத்தை அடைந்துள்ளார் ரோகித் சர்மா. அடுத்ததாக தினேஷ் கார்த்திக் 44 முறையும், ராபின் உத்தப்பா 41 முறையும், சுரேஷ் ரெய்னா 40 முறையும் சொற்ப ரன்களில் அவுட்டான தரவரிசையில் உள்ளனர்.

Edit by Prasanth.K