திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (08:56 IST)

“க்ரவுண்டுக்கு வா.. உன்ன அடிச்சு ஓட விடுறேன்” – சேவாக்கை மிரட்டிய இந்திய வீரர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் 13வது சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் தனது பழைய அனுபவங்களை முன்னாள் வீரர் சேவாக் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கங்குலி, சச்சின், சேவாக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பல அணிகளில் இருந்தும் விளையாடினர். இந்த ஆண்டும் ஐபிஎல்லின் 13வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. தற்போது என்னதான் புதிய வீரர்கள் பலர் விளையாடி வந்தாலும் முன்னாள் வீரர்கள் அளித்த போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முதலில் ஐபிஎல் விளையாடத் தொடங்கியபோது நடந்த சம்பவங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பகிர்ந்துள்ளார். “ஜஹீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் எனது நெருங்கிய நண்பர்கள். இந்திய அணிக்காக ஒன்றாக பல தொடர்களில் விளையாடி இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் வேறுவேறு அணிகளுக்காக விளையாடினோம். அப்போது நெட் ப்ராக்டிசின்போது “க்ரவுண்டுக்கு வா உன்ன அடிச்சு ஓட விடுறேன்” என விளையாட்டாக பேசிக் கொள்வோம்” என தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Edit by Prasanth.K