திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (13:32 IST)

தினேஷ் கார்த்திக்கை புத்திசாலிதனமாக களமிறக்கிய ரோகித் சர்மா

தினேஷ் கார்த்திக்கை புத்திசாலிதனமாக 7-வது வீரராக களமிறக்கி கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை வெற்றி பெற உதவி செய்துள்ளார்


நேற்று முன்தினம் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
 
19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் அவர் தற்போது இந்தியாவின் ஹீரோவாக வலம் வருகிறார். 
 
இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியபோது, தினேஷ் கார்த்திக் 7-வது வீரராக களமிறக்கப்பட்டபோது வருதப்பட்டார். அப்போது, நான் அவரிடம் நீங்கள் பேட்டிங் செய்து ஆட்டத்தை அணிக்காக முடித்து கொடுக்க வேண்டும், ஏனெனில் அதற்கான திறமை உங்களிடம் உள்ளது. அது கடைசி மூன்று அல்லது நான்கு ஒவர்களில் தேவைப்படும். இதனால் தான் அவர் 13-வது ஒவரில் 6-வது வீரராக களமிறங்காமல் இருந்தார். தற்போது ஆட்டத்தை முடித்துவிட்டார் இதனால் அவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த வெற்றி அவருக்கு மேலும் நிறைய உற்சாகத்தை அடுத்த போட்டிக்கு தரும் என பேசினார்.