1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (18:25 IST)

வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்- தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 
வங்கதேசம் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ரன்கள் எடுத்தது.
 
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பத்திலேயே தவான் மற்றும் ரெய்னா விக்கெட்டை இழந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 56 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.
 
இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசியபோது, நான் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்காக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினோம். எனவே இந்த போட்டியில் ஜெயிக்காமல் போயிருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்போம். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. அதிர்ஷ்டவசமாக ஒரு சில  ஷா ட்களை அடித்து நொறுக்கினேன்.இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமானது அப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.