இதுதாண்டா கிளைமாக்ஸ்! ஷங்கர் பாராட்டியது யாரை தெரியுமா?

Last Updated: திங்கள், 19 மார்ச் 2018 (16:20 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், 'படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகளில் இரவுபகலாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி போடப்பட்டுள்ள நிலையில் வரும் தீபாவளி அன்றாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் அவர் திடமாக உள்ளார்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளின் போட்டியை அவர் தனது பிசியிலும் முழுமையாக கண்டு ரசித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தை அவர் தனது டுவிட்டரில் புகழ்ந்துள்ளார். என்ன ஒரு கிளைமாக்ஸ் பேட்டிங், வாழ்த்துக்கள் தினேஷ்' என்று அவர் பாராட்டியுள்ளார்.

ஷங்கர் மட்டுமின்றி நடிகை கஸ்தூரியில் தனது டுவிட்டரில் தினேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ''தினேஷ் கார்த்திக், ஐ லவ் யூ. சென்னை உங்களை விரும்புகிறது. தமிழ்நாடு உங்களை விரும்புகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உங்களை விரும்புகிறது. இந்தியா உங்களை விரும்புகிறது. ஏன் இலங்கையும் உங்களை விரும்புகிறது. பாவம் வங்கதேச பாம்பாட்டக்காரார்கள்'' என்று பதிவு செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :