திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:44 IST)

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் நான் விடுவிக்கப்பட காரணம் பணம் இல்லை… ரிஷப் பண்ட்டின் பதிவு!

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். அதனால் இந்த ஆண்டு அந்த அணியில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டு சஞ்சய் பாங்கர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த அணிக்கு ஒரு இந்திய வீரரைப் பயிற்சியாளர் ஆக்கவேண்டும் என்ற முடிவால்தான் பாண்டிங் விடுவிக்கப்பட்டார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் தக்கவைக்கப் படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். இது மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுள்ளது. இதற்கு அவர் கேட்ட தொகை டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் தர முடியாததால்தான் அவர் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது ரிஷப் பண்ட் அதுகுறித்து பேசியுள்ளார். அதில் “நான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது பணம் இல்லை. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.