வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (15:39 IST)

விராட் கோலிக்கு என்ன ஆச்சு?... திடீரென நடந்த மருத்துவப் பரிசோதனை!

2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் எனத்தெரிகிறது. தற்போது கோலி உள்ளிட்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் கோலிக்கு திடீரென ஒரு மருத்துவப் பரிசோதனை ஸ்கேன் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இன்று நடந்த பயிற்சி போட்டியில் விளையாடியுள்ளார் என்பதால் பெரிய அளவிலான பிரச்சனை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.