தொடர்புடைய செய்திகள்
- டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!
- ஆஸ்திரேலிய தொடர்… கோலியின் முகத்தை முன்னிலைப் படுத்தும் ஆஸி ஊடகங்கள்!
- அந்த நாலு செல்லத்தையும் எப்படியாவது எடுத்துடுங்க… ஆர் சி பி அணிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை!
- ரன் மெஷினுக்கு என்னதான் ஆச்சு?... 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் கோலி!
- பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடிக்கப் போவது யார்?.. ரிக்கி பாண்டிங் கணிப்பு!
‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!
2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.
இந்நிலையில் கோலி பற்றி பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “கோலி கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். வேறு ஒருவராக இருந்தால் அவர் இந்திய அணியில் இருந்தே தூக்கப்பட்டிருப்பார். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடி கம்பேக் கொடுப்பர்” எனப் பேசியிருந்தார்.
இது பற்றி பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் “ரிக்கி பாண்டிங்குக்கு இந்திய அணியுடன் என்ன தொடர்பு? அவர் கோலி பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் கவனம் செலுத்தட்டும். கோலியும் ரோஹித்தும் நாம் நினைப்பதை விட கடினமான மனிதர்கள். அவர்கள் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளனர். வரும் காலத்திலும் படைப்பார்கள்” எனக் கூறினார்.
இப்போது கம்பீருக்கு பதிலளித்துள்ள பாண்டிங் “நான் கோலி பற்றி தாழ்வாகவோ ஸ்லெட்ஜ் செய்யும் விதமாகவோ பேசவில்லை. நான் சொன்னதை கோலியிடம் கேட்டால் அவரே ஒத்துக் கொள்வார். கம்பீர் ஏன் இப்படி பதிலளித்தார் என தெரியவில்லை. ஆனால் அவரின் குணம் கொஞ்சம் தெரியும் என்பதால் அவர் ஆவேசமாகப் பேசியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.