திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2024 (11:00 IST)

விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் திட்டம் இதுதான்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் எனத்தெரிகிறது. தற்போது கோலி உள்ளிட்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கோலி பந்தின் நீளத்தைக் கணிப்பதில் தவறு செய்கிறார் என்று சொல்லியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர் அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பவுலர்கள் எந்த மாதிரியான திட்டங்களை வைத்திருப்பார்கள் எனக் கூறியுள்ளார். அதில் “முதலில் விராட் கோலிக்கு ஆஃப் சைடில் பந்துவீசி வந்தனர் பவுலர்கள். ஆனால் அதில் தேவையான பந்துகளை மட்டுமே தேர்வு செய்து அடித்து ரன்கள் சேர்க்க தொடங்கியுள்ளார். இதனால் அவரின் உடலை நோக்கி அதிக பந்துகள் வீசி அவரை ரன்கள் சேர்க்க விடாமல் செய்வார்கள். இப்படி செய்து நியுசிலாந்து  பவுலர்கள் அவரது விக்கெட்டை வீழ்த்தினர்” எனக் கூறியுள்ளார்.